HIV போல் கரோனா வைரஸும் மக்களுடனேயே தங்கிவிடலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 42 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் சுமார் மூன்று லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் சோதனை பல நாடுகளில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கரோனா வைரஸ் குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் மைக்கல் ரேயான், "எச்.ஐ.வி வைரஸ் இதுவரை மனிதர்களிடம் இருந்து அழியவில்லை. ஆனால் எச்.ஐ.வி உள்ளவர்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வழிகளை நாம் கண்டறிந்துள்ளோம். நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும், இந்த நோய் எப்போது மறையும் என்பது யாருக்கும் தெரியாது. உலகில் உள்ள அனைவருக்கும் விநியோகிக்கக்கூடிய, மிகவும் பயனுள்ள தடுப்பூசியை நாம் கண்டுபிடிக்க முடிந்தால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.