
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக் கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை திமுகவினர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவில் உறுதி ஏற்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது திமுக பெண் நகர்மன்ற தலைவரின் கையை திமுக கவுன்சிலர் பிடித்து இழுக்கும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. உறுதிமொழி ஏற்பதற்காக அனைவரும் கூட்டாக கையை முன்னிறுத்திய நிலையில் திமுக கவுன்சிலர் அங்கிருந்த பெண் நிர்வாகியின் கையை உறுதி ஏற்பது போலவே உரசியும், பிடித்து இழுத்துள்ளார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது.
இது குறித்து திமுக கவுன்சிலர் அளித்துள்ள விளக்கத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணை முன்னே வருமாறு கையைப் பிடித்து இழுத்ததை தவறாக சித்தரித்து வருகின்றனர் விளக்கம் கொடுத்துள்ளார்.