உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்தது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்தது. உலகளவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,70,883 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,25,151 ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 15 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.