
சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் விசாரணை குறித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் நேற்று வீடியோ வெளியிட்டிருந்த நடிகை விஜயலட்சுமி, 'தனக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாட தமிழக அரசு தரப்பிலோ அல்லது யார் தரப்பிலும் வழக்கறிஞர் கூட ஆஜராகவில்லை. இனியும் இதில் நான் போராட தயாராக இல்லை. இத்தனை நாட்கள் எனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்கு நன்றி. இதுவே என்னுடைய கடைசி வீடியோ'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜயலட்சுமியின் வீடியோவிற்கு பதிலளித்து வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சகோதரி விஜயலட்சுமி அவர்களே நீங்கள் 2011 ஆம் ஆண்டு சீமான் மீது பாலியல் புகார் கொடுத்தீர்கள். அந்த புகார் எதற்காக அதிமுக அரசு கிடப்பில் போட்டார்கள் என்று நட்பு வட்டாரத்தில் விசாரிக்கும் போது விஜயலட்சுமி நிலையாக இருக்க மாட்டார்கள். புகாரை திரும்பப் பெற்று விடுவார் எனவே தான் சீமானுக்கு ஆதரவாக அதிமுக அரசு இருந்தது என்றார்கள். அதேபோல் 2023 ஆம் ஆண்டு சீமான் மீது புகார் அளிக்க வந்தீர்கள் நீங்களும் நானும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு தந்தை ஸ்தானம் என சொன்னதின் அடிப்படையில் காவல்துறையை முடுக்கிவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை கொடுக்க வேண்டும் என போலீசார் கடுமையாக விசாரணை மேற்கொண்டனர். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் திடீரென வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று புகாரை திரும்பப் பெற்றுள்ளீர்கள்.

நேற்று ஒரு வீடியோ போட்டுள்ளீர்கள். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எனக்கு யாருமே பேசவில்லை; எனக்கு யாருமே ஆதரவாக இல்லை; சீமானையும் என்னையும் வைத்து அரசியல் செய்கிறார்கள் என்ற அர்த்தத்தில் தான் வீடியோவை போட்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஏற்கனவே எனக்கு வீடியோ ஒன்றை போட்டுவிட்டு தான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரை திரும்பப் பெற்றீர்கள். கடந்த இரண்டு தினத்திற்கு முன்பாக தான் என்னை தொடர்பு கொண்டீர்கள் 'அம்மா நான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். எனக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்' என பேசினீர்கள். சரி உண்மையாக நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் உங்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என சொன்னேன். சொல்லிவிட்டு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் பெட்டிஷன் போடுவதற்கு வழக்கறிஞர்களிடம் கலந்து ஆலோசித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். உங்களுக்காக உண்ணாவிரதம் இருக்கவும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் திடீரென வீடியோவில் வந்து எதற்குமே வரமாட்டேன். யாருமே எனக்காக பேசவில்லை என சொல்லி விட்டீர்கள். நான் என்ன கேட்கிறேன் சீமானுக்கும் எனக்கும் கருத்தியல் ரீதியாக தான் பிரச்சனை. அதை நான் அரசியல் ரீதியாக பார்த்துக் கொள்வேன். நான் உங்களுக்காக தான் சீமானை பகைத்துக் கொண்டேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. சீமான் தான் உங்களை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் இதைச் சொல்லி தமிழ்நாட்டு மக்களிடையே ஆதரவு தளத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் ஆதரவு தளத்தை ஒரு வீடியோ மூலமாக தவறாக பேசுகிறீர்கள். நீங்கள் பேசிய அந்த வீடியோவுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். நீங்கள் என்ன வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதை ஓப்பனாக கேட்கலாமே அதை விட்டுவிட்டு அவர்கள் ஹெல்ப் பண்ணவில்லை இவங்க ஹெல்ப் பண்ணவில்லை என உதவி செய்ய வருபவர்களை உதாசீனப்படுத்த கூடாது. நீங்கள் இன்று பேசிய வீடியோவிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் நானும் ஹெல்ப் பண்ண முடியாது. நாட்டு மக்களும் ஹெல்ப் பண்ண மாட்டார்கள்'' என தெரிவித்துள்ளார்.