
சென்னை கோவிலம்பாக்கத்தில் வீட்டில் ஏற்பட்ட கேஸ் கசிவால் நான்கு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கோவிலம்பாக்கத்தில் காந்திநகர் 14வது தெருவில் வசித்து வருபவர் முனுசாமி. இவர் வீட்டில் இரவு முழுவதும் கேஸ் கசிந்துள்ளது. காலை முனுசாமியின் மனைவி ராணி மின்சார சுவிட்சை ஆன் செய்த பொழுது கேஸ் கசிவு காரணமாக தீப்பிடித்தது. வீட்டிலிருந்த முனுசாமி, ராணி அவருடைய மகள் சாந்தி, சாந்தியின் கணவர் ரகு ஆகிய நான்கு பேரும் தீயில் சிக்கிக் கதறியுள்ளனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தால் கோவிலம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேடவாக்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.