Skip to main content

கரோனா பரவல் அதிகரிப்பு; ஜூலை மாதம் வரை ஊரடங்கை நீடித்தது இங்கிலாந்து!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

borris johnson

 

இங்கிலாந்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தாலும், கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் ஏற்கனவே அந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த தீவிர ஊரடங்கு, தற்போது ஜூலை 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இங்கிலாந்து அரசு, சத்தமே இல்லாமல் ஊரடங்கு நீட்டிப்பை அமல்படுத்தியுள்ளதாக, இங்கிலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கரோனா தோற்றால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளிலிருந்து, இங்கிலாந்திற்கு வருபவர்களை 10 நாள் தனிமைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் கூறியுள்ளது.

 

கடந்த வெள்ளிகிழமை, "கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது குறித்து கருத்தில்கொள்ளவில்லை. கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வேலை செய்கிறது என்ற நம்பிக்கை வரும் வரையில், ஊரடங்கு விதிகளில் தளர்வு கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கவும் படாது" என தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்தில் அதிகரித்து வரும் கரோனா பலி எண்ணிக்கைக்கு உருமாறிய கரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்