உலகம் முழுவதும் கடந்த 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், உலக கோடிஸ்வரர்களின் ஒருவரான பில் கேட்ஸ் கிறிஸ்துமஸ் தாத்தாவாக இளம்பெண் ஒருவருக்கு 37 கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் பரிசை கொடுத்துள்ளார்.
சமூக வலைதளமான ரெட்டிட் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் நேரத்தில் பிரபலமானவர்களை வைத்து சாமானிய மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பில் கேட்ஸ் மூலம் மிச்சிகனைச் சேர்ந்த ஷெல்பி என்ற இளம் பெண் ஒருவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது ரெட்டிட். அந்த பெண்ணுக்கு பிடித்த புத்தகங்கள், பொம்மைகள், அவரின் தாயார் நினைவாக இருதய அறக்கட்டளைக்கு நிதி என பல பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவான பரிசுகளை கடந்து அந்த பெண்ணுக்கு பிடித்த மற்றும் தேவையான பொருட்களை பில் கேட்ஸ் பரிசாக கொடுத்துள்ளது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் இந்த செயலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஷெல்பி நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் தனக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறியதே தனக்கான மிகப்பெரிய பரிசு என கூறும் ஷெல்பி, தனது வாழ்வு, தாயை இழந்த சோகம், தனது திருமணம் இவை அனைத்தையும் குறித்து, பில் கேட்ஸின் பரிசுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்து அந்த கடிதத்தை எழுதியுள்ளார்.