பூமியிலிருந்து இயக்கி, நிலாவில் அதிக நாட்கள் இயங்கிய ரோபோ என்ற பெருமையை இதுவரை சோவியத் ரஷ்யாவின் லூனோகோட் 1 என்ற ரோபாதான் தக்க வைத்திருந்தது. அந்த ரோபோதான் முதன்முதலில் வேற்று கோளில் தரையிறக்கப்பட்ட முதல் ரோபோ. அத்துடன் அந்த ரோபோவை பூமியிலிருந்தே விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கினார்கள்.
1970- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17- ஆம் தேதி சோவியத் ரஷ்யா, இந்த ரோபோவை வெற்றிகரமாக நிலவின் மறுபக்கத்தில் இயக்கி சாதனை புரிந்தது. 900 கிலோ எடையுடன் கூடிய இந்த ரோபோ, நிலவில் 3 மாதங்கள் மட்டுமே இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது. இதை பூமியிலிருந்து 5 பேர் கொண்ட குழு வழிநடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த ரோபோ திட்டமிட்டதைக் காட்டிலும் அதிகமாக சுமார் 10.5 மாதங்கள் இயங்கியது. நிலவில் அது 10.5 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 20 படங்களையும், 200 தொலைக்காட்சி வீடியோக்களையும் எடுத்து அனுப்பியது
சோவியத் ரஷ்யாவின் லூனோகோட் 1 ரோபோவின் சாதனையை சீனாவின் யூட்டு 2 ரோபோ முறியடித்துள்ளது. இந்த ரோபோ சீனாவின் நிலாப் பயமத் திட்டமான சேங் 4ன் கீழ் ஜனவரி 3 ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது. இந்த ரோபோவுடன் ஒரு ஸ்டேஷனரி லேண்டரும் இணைந்திருந்தது. இரண்டும் தொடர்ச்சியாக பூமியிலிருந்து இயக்கப்படுகின்றன. 11 மாதங்களைக் கடந்து இவை இயங்கி, லூனோகோட் 1 ரோபோவின் சாதனையை முறியடித்திருக்கின்றன.