நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது நியூசிலாந்து நீதிமன்றம்.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இருவேறு மசூதிகளில் கடந்த ஆண்டு மார்ச் 15 அன்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதானவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். 51 பேர் உயிரிழந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், அவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பிரென்டன் டர்ரன்ட் குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி, டர்ரன்ட்க்கு அதிகபட்ச தண்டனையாக பரோலில் வெளியே வர முடியாத வகையில் வாழ்நாள் சிறை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.