கரோனா பாதிப்பு ஏற்பட்ட சக எம்.பி.யுடன் தொடர்பில் இருந்ததால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தொடர் சிகிச்சையின் பலனாக கரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்குத் திரும்பினார். இந்நிலையில், கரோனா பாதிப்பு ஏற்பட்ட சக நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பில் இருந்ததால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கூட்டம் ஒன்றை போரிஸ் ஜான்சன் நடத்தினர். அதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஆண்டர்சன் என்பவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் போரிஸ் ஜான்சன்.