Skip to main content

ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்தது அமெரிக்க நாடாளுமன்றம்!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

joe biden

 

அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தலில், ஜோ பைடன்  அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், அதிபர் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கும் நாடாளுமன்ற கூட்டம் இன்று (07/01/2021) தொடங்கியது. 

 

அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் குழு ஒன்று, அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது. இந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு வன்முறையாளர்கள், நாடாளுமன்ற கட்டடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

 

அதன்பிறகு நாடாளுமன்ற கூட்டம் மீண்டும் தொடங்கியது. இதில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக, டிரம்ப் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டு, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்கவுள்ளார் ஜோ பைடன்.

 

சார்ந்த செய்திகள்