Skip to main content

புத்தகத் திருவிழாவில் வயநாடு நிவாரண உண்டியல்

Published on 04/08/2024 | Edited on 04/08/2024
 Wayanad Relief Bill at Book Festival

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7 வது புத்தகத் திருவிழா மாமன்னர் கல்லூரி விளையாட்டு திடலில் நடந்து வருகிறது. நக்கீரன் உட்பட ஏராளமான பதிப்பகங்களின் புத்தகங்கள் லட்சக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. தினசரி மாலை நேரங்களில் சிறப்பு அழைப்பாளர்களின் நிகழ்ச்சிகள், சிறுவர்களை கவரும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் வாசகர்கள் வந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். பள்ளி, கல்லூரி, போட்டித் தேர்வு மையங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் வாகனங்களில் வந்து புத்தகத் திருவிழாவை கண்டதுடன் அவர்களுக்கு தேவையான புத்தகங்களையும் வாங்கிச் செல்கின்றனர். போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் இளைஞர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் பொது நூலகங்களுக்கு தேவையான போட்டித் தேர்வுகளுக்கான ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் புத்தகங்களை வாங்கியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை 9 வது நாளில் மாலையில் வாசகர்கள் குவிந்திருந்தனர். மேலும் கேரள வயநாடு பகுதியை புரட்டிப் போட்ட நிலச்சரிவு, வெள்ள நிவாரணத்திற்காக விழாக்குழுவினர் உண்டியல் வைத்துள்ளனர். புத்தகத் திருவிழாவிற்கு வரும் வாசகர்கள் வயநாடு நிவாரண உண்டியலில் தங்களால் இயன்ற தொகையை போட்டுச் செல்கின்றனர். இந்த நிவாரண உண்டியலில் பொதுமக்களால் வழங்கப்படும் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வயநாடு நிவாரணமாக வழங்க உள்ளதாகக் கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்