வார விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனையொட்டி கொடைக்கானல் பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டண வசூல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது .
தனியார் விடுதிகள் கட்டண கொலையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார். கொடைக்கானல் மட்டுமல்லாது பழனி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பழனி வருவதாலும், வார விடுமுறை என்பதாலும் பழனியில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரோப் காருக்காகவும்,பழனி மலை ரயில் சேவைக்காகவும் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர் .