பாண்டிச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற டாடா ஏஸ் வாகனம் ஒன்று பாட்டாசுகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது. வண்டி செஞ்சி வடவனூரில் சென்று கொண்டிருந்த போது கரும்புகை வருவதாக அங்குள்ள மக்கள் வண்டி ஓட்டுநர் இடம் தெரிவித்ததாக தெரிகிறது.
புகையை அணைக்க மக்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தனர். அப்போது வண்டியில் இருந்த ஒருவர் பட்டாசுகள் உள்ளதாக தெரிவித்தார். இதை அறிந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். பட்டாசுகளை அகற்றுவதற்காக சென்றபொழுது நொடிப்பொழுதில் வெடித்தது. இதில் வண்டியில் சென்ற இருவர் மற்றும் கூட்டத்தில் இருந்த ஒருவர் பலியாகினர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
பலியான 3 பேரில் இருவர் அடையாளம் காணப்பட்டனர். டிரைவர் புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த இளவரசன், கிளினர் அதே பகுதியை சேர்ந்த சாய்பாபா. முதல் கட்ட விசாரணையில் பட்டாசுகளை உரிமம் இல்லாமல் எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. செஞ்சி போலீசார் தீவிர விசாரணையில் உள்ளனர், இதே போன்ற சம்பவம் கடந்த 2007 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதில் உடல் சிதறி 16 பேர் இறந்தனர்.