Skip to main content

திருவண்ணாமலையில் மண் சரிவு; 7 பேரின் நிலை என்ன?

Published on 01/12/2024 | Edited on 01/12/2024

 

 

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் வீடுகள் புதையும் நிலை ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ள 7 பேரின் நிலை என்னவானது என தெரியாமல் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் மலை அடிவாரத்தில் உள்ள வ.உசி நகரில் பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு பேரை காணவில்லை என தகவல் வெளியான நிலையில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து பேரிடர் மீட்புப் படையினர் அங்கு செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் மாநில மீட்புப் படை குழுவினரும் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மண் சரிவாக மட்டுமல்லாமல் 14 அடி உயரப் பாறை ஒன்றும் உருண்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர்பாஸ்கரன் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். ராஜ்குமார் என்பவரது வீட்டின் மேல் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்தம் ஏழு பேர் இடிபாடுகள் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜ்குமார், ராஜ்குமாரின் மனைவி மீனா, கௌதம், இனியா, தேவிகா, வினோதினி உட்பட ஏழு பேர் ஈடுபாடுகளில் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்