![Wayanad Poetry Book Launch Ceremony at Sivaganga Tamil Reading Circle](http://image.nakkheeran.in/cdn/farfuture/HDMk5tGWv_f416ZcF4UHBKCS5t0fPw_8pZXEmBg3k1k/1730044084/sites/default/files/inline-images/232_30.jpg)
சிவகங்கை தமிழவைய வாசிப்பு வட்டத்தில் முதல் நிகழ்வாக வயநாடு எனும் கவிதை நூல் அறிமுக விழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நாட்டரசன் கோட்டை அகை ஆதிரை நாட்டியப் பள்ளி மாணவிகள் தமிழ் போற்றும் கலை நிகழ்வு தந்தனர்.
இந்நிகழ்விற்கு பேராசிரியர் முனைவர் கற்பகம் வரவேற்புரைத்தார். சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், நா. சுந்தரராஜன் தலைமை வகித்தார். சிவகங்கை தமிழவையத்தைச் சேர்ந்த வித்யா கணபதி முன்னிலை வகித்தார், புலவர் கா.காளிராசா கடந்த வாரம் நாகர்கோவிலில் வெளியிடப்பட்ட வயநாடு கவிதை நூல் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். த.மு.எ.க.ச மாவட்டத் தலைவர் முனைவர் தங்க முனியாண்டி, சிவகங்கை மகளிர் கல்லூரி விரிவுரையாளர் மணிமாறன், கவிஞர் தமிழ்க்கனல் ஆகியோர் வாழ்த்துரைத்தனர்.
நூலாசிரியர் கவிஞர் மகாபிரபு ஏற்புரை வழங்கினார். தமிழவையத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் நன்றியுரைத்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு இராமச்சந்திரன்,தமிழவையத்தைச் சேர்ந்த இளங்கோவன், அந்தோணி உள்ளிட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நண்பர்கள் கலந்து கொண்டனர்.முனைவர் சகுபர் நிஷா பேகம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.