!['Wait for this voice from the south' - Tamil Nadu Chief Minister on Audio Series](http://image.nakkheeran.in/cdn/farfuture/CYMTnyFgTM80CeFjXUO8DdvcccY2K0FEOC5zVti1_nk/1693446795/sites/default/files/inline-images/a1294.jpg)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவருடைய எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், 'ஆரம்பிக்கலாமா வணக்கம்... கடந்த சில மாதமாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவத்தில் பல விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். திமுக 75வது ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி.
அண்ணா, கலைஞர் என்று இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால் உருவாக்கப்பட்ட உடன் பிறப்புகள் நாங்கள். இப்பொழுது இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். 2024-ல் முடியப் போற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறது; எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகின்ற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரியஸில் பேசப் போகிறேன். அதற்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற தலைப்பு வச்சுக்கலாமா? தெற்கிலிருந்து வரும் இந்தக் குரலுக்காகக் காத்திருங்கள்' என அந்த ஆடியோ முடிகிறது.
Awakening India's Tomorrow, A Southern Voice Speaks for #INDIA!#Speaking4India pic.twitter.com/VqdY0PoxWF
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023