சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க மத்திய அரசு நினைக்கிறது என சோபியாவின் தந்தை சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோபியாவின் தந்தை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது,
சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்கி, வெளிநாடு செல்ல முடியாமல் தடுக்க நினைக்கின்றனர். வன்முறையில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன், பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அளித்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சோபியா ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார், அவரது படிப்பிற்கு தடைபோட மத்திய அரசு முயற்சி செய்கிறது. சோபியாவுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவரால் செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.