Skip to main content

உடற்பயிற்சியின் போதே ரத்த வாந்தி; உயிரிழந்த ஜிம் மாஸ்டர்

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Vomiting blood during exercise; gym master passed away

 

சென்னையை அடுத்த ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டாரத்தில் உள்ள நெமிலிச்சேரி ஊராட்சியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஆகாஷ். 25 வயதான இவர் நடுக்குத்தகையில் உள்ள உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆணழகன் போட்டிக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அவர் மாநில அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

 

கடந்த 22 ஆம் தேதி உடற்பயிற்சி மேற்கொண்டு இருந்த போது திடீரென ரத்த வாந்தி எடுத்த ஆகாஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஆகாஷ் உயிரிழந்தார். கட்டுமஸ்தான உடலைக் கொண்டு வர ஆகாஷ் ஸ்டீராய்டு ஊசிகளை அதிகளவில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்