சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் விருதுநகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்.
“மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஒரு பக்கம், பட்டாசுத் தொழிலில் பச்சைப் பட்டாசு (Green Crackers) கண்டுபிடித்துவிட்டதாக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டார் மத்திய அமைச்சர். அடுத்த இரண்டு நாட்களிலேயே, பட்டாசு வெடிக்கக்கூடாது; க்ரீன் பட்டாசும் வெடிக்கக்கூடாது என்கிறார் இன்னொரு மத்திய அமைச்சர். இது, பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல் இருக்கிறது. இன்னும் உச்ச நீதிமன்றம் முடிவு சொல்லாத நிலையில், இந்த தீபாவளி சிறப்பான தீபாவளியாக இருக்கவேண்டும் என்று நாம் எல்லாரும் நினைத்துக்கொண்டிருக்கும்போது, மத்திய அரசு இரண்டு முகங்களைக் காட்டுகிறது. சிவகாசி மக்களின் வாழ்வாதரமாக இருப்பது பட்டாசு. இந்தப் பட்டாசுத் தொழிலை மோடி அரசு.. குறிப்பாக மோடி அவர்கள் மூட வேண்டும்; தடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. பட்டாசுத் தொழிலுக்குத் தடை வருமென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கவும் நான் தயாராக இருக்கிறேன். பட்டாசுத் தொழிலைக் காப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன்.
மோடி அவர்கள் தனிப்பட்ட முறையில் பட்டாசினால் டெல்லியில் காற்று மாசுபடுகிறது என்று நினைக்கிறார். அதுபோல் இல்லை என்பதைப் பல ஆய்வுகள் தெரிவித்திருகின்றன. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு ஒரு காரணம், டெல்லியின் போக்குவரத்து ஒரு காரணம், வட இந்தியாவில் உள்ள விவசாயிகள் எரிக்கின்ற.. அந்த விவசாயத்தினால் வருகின்ற மற்ற கழிவுகளும் ஒரு காரணம், இவ்வாறு இருக்கின்றன. அந்தக் கழிவுகளைக் காப்பாற்றுவதற்காக இந்த ஆண்டு மத்திய அரசு 1600 கோடி ரூபாய் கொடுக்கிறது. சிவகாசி பட்டாசைக் காப்பாற்றுவதற்காக ஒரு கோடி ரூபாய்கூட கொடுக்கத் தயாராக இல்லை. சிவகாசியின்.. நமது விருதுநகர் மாவட்டத்தின்.. தமிழகத்தின் அடையாளமாக விளங்கும் பட்டாசை முழுமையாக அழித்தே தீரவேண்டும் என்று நினைக்கின்ற மோடியினுடைய திட்டம் நிறைவேறாது.
தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பால்வளத்துறையில் ஊழல் நடக்கிறது கொண்டிருக்கிறார் என்ற தகவல் வந்திருக்கிறது. அதற்கென்றே ஒரு குழுவை நியமித்திருக்கிறேன். நாளொன்றுக்கு 10 லட்ச ரூபாய் அவர் கல்லா கட்டுகிறார் என்ற செய்தியும் வருகிறது. மங்குனி அமைச்சர் விரைவில் சிக்கவிருக்கிறார். முழுமையான தகவலுடன் உங்களிடம் வருவேன். சீன அதிபர் வருவதை அனைவரும் வரவேற்கிறார்கள். குறிப்பாக, தமிழகத்தில் இருக்கின்ற பா.ஜ.க ஆட்சி, மிகப்பெரிய அளவில், கொட்டுமேளம், தாரை தப்பட்டை, உறுமி மேளம் என எல்லா ஆட்டமும் ஆடி வரவேற்க இருக்கிறதாம். ஒவ்வொரு இடத்திலும் மந்திரி வந்து சீன அதிபரை வரவேற்கப் போறாங்க. இவர்களுடைய கல்யாணத்திற்கு வருவதைப் போல எப்படி சுதாகருடைய கல்யாணத்திற்காக ஜெயலலிதா அம்மையார் சென்னையை அலங்கரித்தாரோ, அதைப்போல சீன அதிபருக்காக மிகப்பெரிய அளவில் இந்த பா.ஜ.க ஆட்சி.. எடப்பாடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி, தமிழகத்திலே செய்துகொண்டிருக்கிறது. இது எந்த விதத்தில் தமிழகத்திற்கு நன்மையைத் தரும்? தமிழகத்தின் தொழில்களுக்கு இதனால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பது, அவர்கள் வந்து சென்ற பிறகுதான் தெரியும்.
சிவகாசியின் பட்டாசுத் தொழிலுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது சீனப் பட்டாசு. அதனால், காங்கிரஸ் ஆட்சியில் இது தடை செய்யப்பட்டது. டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில், இது தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளது. அப்படி தடை செய்யப்பட்ட பட்டாசை இப்போது கள்ளத்தனமாகக் கொண்டுவருகின்றனர். அந்த சீனப் பட்டாசுதான், இந்தியாவில் விற்கப்படுகிறது. அதை எப்படி தடுக்கவேண்டும் என்பது தான் முக்கியம்.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், தமிழக அரசு தாவிக் குதித்து வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்திற்காக அம்மையார் செய்த ஆடம்பரங்களைப் போல, தற்போது இறங்கியிருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. நான் இம்ரான்கான் மோடி சந்தித்தால்கூட வரவேற்பேன். இப்படி நடந்தால் எந்த ஒரு குறையும் காணமுடியாது. சந்திப்பு நடந்தால்தான் இரு நாட்டு பிரச்சனைகள் தீரும். ஆனால், மாநில அரசு, அதுவும் குறிப்பாக பா.ஜ.க அரசு, இவ்வளவு தாவிக் குதிப்பதுதான் நமக்குப் புரியவில்லை. எல்லா வழிகளிலும், கிட்டத்தட்ட 50 இடங்களில் டான்ஸ் நடக்கிறதாம். மயிலாட்டம், குயிலாட்டம், ஒயிலாட்டம், காவடிஆட்டம் என எல்லா ஆட்டங்களுக்கும் ஏற்பாடு நடக்கிறதாம். இதெல்லாம் இதுவரைக்கும் நாம் கேள்விப்படாதது. எல்லா இடத்திலும் இருந்து சைனீஸ் அதிபர் பார்க்கப் போகிறாரா?
தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடைய கோரிக்கை ஜிஎஸ்டி. தீப்பெட்டிக்கு.. மெக்கனைஸ் தீப்பெட்டிக்கு 12%. அதாவது, 18-ல் இருந்து 12 ஆகக் குறைக்க வேண்டும் என்பதே கோரிக்கை. அதற்காக நிதி அமைச்சருக்குக் கடிதம் எழுதுவேன் என்று சொல்லியிருக்கிறேன் அதுபோல், கைத்தீப்பெட்டிக்கு 5% வரியே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதையும் எழுதவிருக்கிறேன். இந்தக் கடிதம், தமிழக நிதி அமைச்சருக்கு, தீப்பெட்டி தொழிலுக்கான 18% வரியை குறைப்பதற்காக. 12-ஆகக் குறைக்கவும் 5-ஆகக் குறைக்கவும் வலியுறுத்துவேன்.” என்றார் தொகுதி நலனில் அக்கறையுள்ளவராக.