Published on 23/08/2020 | Edited on 23/08/2020
காவலர் பணியில் சேர்க்க விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தடை விதித்ததை எதிர்த்து பிரவீன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றப்பின்னணியை விசாரிக்காமல் போலீஸ் வேலை தந்தால் இன்னொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. மனுதாரர் தன் மீதுள்ள குற்ற வழக்கு விவரத்தை குறிப்பிடாமல் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். ஒழுக்கம் சார்ந்த பணியான போலீஸ் பணிக்கு குற்ற வழக்கில் சிக்கியவர் உரிமைகோர முடியாது' என்று தெரிவித்துள்ளார்.