Published on 08/05/2020 | Edited on 08/05/2020
![villupuram - congress - tasmac shop open issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/iasu_sbZnqFS3U2kDx4OzCZfBxAFB5hqLJaVUwy4l-M/1588903447/sites/default/files/inline-images/606_14.jpg)
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/jtBSqA_8U6Xb9tfFJ3qAnAr3cWxa9lh6skqmyKxZcQo/1588905701/sites/default/files/inline-images/610_7.jpg)
கரோனாவை ஒழிப்பதில் அலட்சியமும், மதுக்கடைகள் திறப்பதில் ஆர்வமும் காட்டும் தமிழக அதிமுக அரசைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ், திமுக சார்பாக மே 7ஆம் தேதி காலை 10 மணியளவில் விழுப்புரம் காந்தி சிலை அருகில் விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான குலாம்மொய்தீன் தலைமையில் 'கருப்பு பேட்ஜ்' அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்.