திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருச்சி சென்றுள்ளார். சுற்றுலா மாளிகையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியில் முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் திரண்டிருந்த திமுகவினர் கருப்புக்கொடிகளை உயர்த்தி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஸ்ரீரங்கம் ஆலயம், உச்சிபிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆளுநர் மாலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், கல் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய இருக்கிறார். மேலும் சுற்றுலா மாளிகையில் பொதுமக்களை சந்தித்து மனு பெறவும் உள்ளார். இது மாநில உரிமைகளுக்கு எதிரான செயல். ஆளுநநரின் ஆய்வுப் பணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அவமதிப்பது போல் உள்ளது என்று கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.