18 எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேரையும் குற்றாலத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளார் என்றும், அதற்கான ஏற்பாடுகளை வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆம்பூர் எம்எல்ஏ பாலசுப்பிரமணியம்,
தினகரன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் கலந்து கொண்டோம். எங்களுடன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் கலந்து கொண்டனர்.
பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும்போது, எங்களில் ஒருவர் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கர விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளலாம். 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு நல்லபடியாக வரும் என்றார். நாங்களும் சரி என்றோம். இதற்கும் தினகரனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவர் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.
குற்றாலம் போய்க்கொண்டிருக்கிறீர்களா?
நான் ஆம்பூரில் இருக்கிறேன். குற்றாலம் போவதாக வந்த செய்தியை டிவியில் பார்த்துக்கொண்டிக்கிறேன்.
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரப்போகிறது என்றும், 18 பேரையும் ஆளும் அதிமுக அரசு தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும் செய்தி வெளியானதே?
நாங்கள் 18 பேர் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேரும் தினகரன் பக்கம்தான் இருப்போம். எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.