Published on 26/12/2024 | Edited on 26/12/2024











விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. ரியா ஷிபு தயாரித்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில் சமீபத்தில் டீசர் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் அடுத்த மாதம் ஜனவரியில் வெளியாகவுள்ளது.