Published on 31/10/2022 | Edited on 31/10/2022
![jkl](http://image.nakkheeran.in/cdn/farfuture/_oLW5NIEdVpogmMx7xahWaAl8mCVUoqqWMWzDF7zhLY/1667232506/sites/default/files/inline-images/aa_32.jpg)
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சைபர் கிரைம் டிஜிபி அமரேஷ் புஜாரி சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த நிர்வாக டிஜிபியாக மாற்றப்பட்டு உள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த அபாய் குமார் சிங், சிபிசிஐடி கிரைம் பிராஞ்ச் ஏடிஜிபியாக மாற்றப்பட்டு உள்ளார்.
காவல்துறை நவீனமயமாக்கல் ஏடிஜிபியாக இருந்த சஞ்சய் குமார், சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டு உள்ளார். சென்னை தலைமையக ஏடிஜிபியாக இருந்த வெங்கடராமன் நவீனமயமாக்கல் துறை கூடுதல் பொறுப்பு வகிப்பார். சென்னை ஐஜி ராதிகா சென்னை ஆயுதப்படை ஐஜியாக மாற்றப்பட்டு உள்ளார். ஏற்கனவே சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த நிர்வாகத்தில் பணிபுரிந்த சுனில் குமார் சிங், கிரைம் பிராஞ்ச் ஏடிஜிபி ஷகில் அக்தர் ஆகியோர் பணி ஓய்வு பெறுகின்றனர்.