![Tomato prices skyrocket to 100 rupees ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/kKLsCzcdjmySmRuaRdMz_Pg9G1SIxUb7RGlTy38hgDc/1636353590/sites/default/files/inline-images/z99_1.jpg)
சென்னையில் ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனை கடைகளில் 90 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி விலை 70 ரூபாய் என்றிருந்த நிலையில், தற்போது விலை 100 ரூபாய் என எகிறியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
![Tomato prices skyrocket to 100 rupees ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/_csCHVWqR8YOspWErqFWmxPOZYA3rmjxgLjhkXTiYig/1636353781/sites/default/files/inline-images/z100_4.jpg)
சென்னையில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் மழை பாதிப்புகளைச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய உணவுப்பொருளான தக்காளி விலை சென்னையில் 100 ரூபாயை எட்டியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.