Published on 27/04/2020 | Edited on 27/04/2020

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் பெரிய நாயக்கன்பாளையம் பிரிவு, நாயக்கன்பாளையம் சுற்றுக்குட்பட்ட திருமாலூர் வடக்கு பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கிறது ஒரு பட்டா நிலம். அப்பட்டா நிலத்தில் நாய்களால் கடித்து குதறப்பட்டு, இறந்த நிலையில் கிடந்த பெண் புள்ளிமான் ஒன்றை குப்புராஜ், ஜெயக்குமார், ஈஸ்வரன் ஆகியோர் கூறு போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வனத்துறையினர் 3 பேர் நிற்பதை கவனித்துள்ளனர். அவர்களை நோக்கி சென்றுள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் கையும் களவுமாக வனத்துறை ஆட்களால் பிடிக்கப்பட்டனர்.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்பேரில், பிடிபட்டவர்களுக்கு தலா ரூபாய் 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூபாய் 60 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.