தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நாளை (09/06/2024) நடைபெற இருக்கிறது. இந்த தேர்வின் பொழுது தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் வைத்திருக்க வேண்டியவை தொடர்பான அறிவுறுத்தல்கள் கவனிக்கத்தக்கது.
தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டியவை
1) தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் 8 மணியிலிருந்து 8.30 மணி.
2) ஓஎம்ஆர் விடைத்தாள் வழங்கப்படும் நேரம் 9 மணி.
3) வினா தொகுப்பு வழங்கப்படும் நேரம் 9:15 மணி.
4) தேர்வு தொடங்கும் நேரம் 9:30 மணி.
5) ஓஎம்ஆர் விடைத்தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A,B,C,D எண்ணிக்கையை பதற்றம் இல்லாமல் எழுத வேண்டும்.
6) ஓஎம்ஆர் விடைத்தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதை அழித்துவிட்டு வேறு ஒரு ஆப்ஷனை குறிக்க வேண்டாம்.
7) ஒரே கேள்விக்கு இரண்டு ஆப்ஷன்களில் விடை குறிப்பிடுதல் கூடாது.
8) ஓஎம்ஆர்-ல் எக்காரணம் கொண்டும் வைட்னர் (WHITENER) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
9) ஓஎம்ஆர் விடைத்தாளில் கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர், கையொப்பம் இடப்பட வேண்டும். அதனை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
நுழைவுத் தேர்வுக்கு வருபவர்கள் வைத்திருக்க வேண்டியவை
1) நுழைவுச்சீட்டு (hall ticket).
2) கருமை நிற பந்துமுனை எழுதுகோல்.
3) அடையாள அட்டை (aadhaar/driving/driving licence/ passport/ voter id).
4) நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
5) தேர்வு முடிந்தவுடன் நுழைவுச் சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.