Published on 12/01/2021 | Edited on 12/01/2021
நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன் தான் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "மு.க.ஸ்டாலின் கிராமசபை நடத்துகிறாரே அதனால் என்ன பயன், அவர் என்ன பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா? என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதலமைச்சர்! ஆம் நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன் தான்! இதோ ஓர் ஆதாரம்: கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெருவிளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக ஆளும் அடிமை MLA- வால் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் சொன்னார். இன்று அரசு சார்பில் தெருவிளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்! யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களே!" என்று குறிப்பிட்டுள்ளார்.