![tn assembly election 2021 dmk meeting at anna arivalayam in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/-fGewikm0Vk6UBLotwsjvtlV6ZP705s0VJZNDFWfkUc/1608442675/sites/default/files/inline-images/mks3222.jpg)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநகர, பேரூர், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், "கூட்டத்தின் இறுதியில் ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்க உள்ளார். தேர்தல் களத்திற்கு செல்பவர்களை ஸ்டாலின் வாழ்த்தி அனுப்ப போகிறார். டிசம்பர் 23- ஆம் தேதியில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். டிசம்பர் 23- ஆம் தேதி முதல் ஜனவரி 10- ஆம் தேதி வரை தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தனது பரப்புரையில் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்களை நடத்தி நிர்வாகிகளை ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். 'விடியலை நோக்கி' என்ற பரப்புரை கூட்டத்தின் இடையே கிராம சபை கூட்டங்களை நடத்தவுள்ளார்." என்றார்.