Published on 13/03/2020 | Edited on 13/03/2020
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தார். மார்ச் 12- ஆம் தேதி காலை வெளியே புறப்பட்டபோது, வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்தார்.
![tiruppattur district vaniyambadi two wheeler thief](http://image.nakkheeran.in/cdn/farfuture/mUrhCkV9Ui5R7zqWKMYGnACxSTEXXKS0Pjw1ZRJvQpA/1584041954/sites/default/files/inline-images/two%20wheeler33.jpg)
தன் வீட்டுக்கு அருகில் உள்ள தனிநபரின் சிசிடிவி கேமரா காட்சிகளை அவர் சென்று பார்த்தபோது, ஒரு இளைஞர் ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வதை கண்டறிந்தார். அதுபற்றிய வீடியோ காட்சிகளுடன் வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் முபாரக் சென்று புகார் தந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள், வீடுகளில் திருடு போவது தொடர் கதையாகியுள்ளது.