யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் பூரணசுந்தரி, பாலநாகேந்திரனுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நேரில் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, மதுரை மற்றும் கோவை அரசு இசைக்கல்லூரிகளில் ரூபாய் 1.7 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களைத் திறந்து வைத்தார். மேலும் மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் முன்னேற்ற அறிக்கையையும் முதல்வர் வெளியிட்டார்.
அதேபோல் கலை பண்பாட்டுத்துறை http://artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் கலைஞர்களுக்கான தனி இணைய வாயிலை முதல்வர் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து மதுரை பூரணசுந்தரி, சென்னை பாலநாகேந்திரனை நேரில் பாராட்டி முதல்வர் பழனிசாமி வழங்கினார். மேலும் தஞ்சை ஸ்ரீதருக்கு 2019- ஆம் ஆண்டுக்கான 'ஜீவன் ரக்ஷா பதக்' விருதுடன் பதக்கம், சான்றிதழ், ரூபாய் 1 லட்சத்தையும் முதல்வர் வழங்கினார்.
ஒக்கநாடுமேலையூர் வெள்ளையன் ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய ஆறு பேரை மீட்டதற்காக ஸ்ரீதருக்கு முதல்வர் விருது வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.