![Police investigation 3 members of the same family lost their lives](http://image.nakkheeran.in/cdn/farfuture/7b_hprfhawNsnmJkAW--A9PLSHf68xq-5vx5qjufvCg/1739329573/sites/default/files/inline-images/ulundur-art.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ் நகர் என்ற பகுதி சேர்ந்தவர் முத்து. இவருக்குத் தேவி என்ற மனைவியும், பிரவீன்குமார் என்ற ஒரு மகனும் இருந்தனர். இவர் நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதன் காரணமான இவர் நெய்வேலி என்எல்சி பணியாளருக்கான குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார்.
இத்தகைய சூழலில் தான் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார்ப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள குளத்தில் இவருடைய மனைவி தேவி மற்றும் மகன் பிரவீன்குமார் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மிதந்து உள்ளனர். அருகிலேயே உள்ள மரத்தில் முத்துவும் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் குளத்தில் மிதந்த மனைவி மற்றும் மகன் இருவரின் உடலையும் மீட்டு, முத்துவின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக 3 பேரின் உடலையும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.