திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரின் மையத்தில் உள்ள வெங்கடேஷ்வரா லாட்ஜ். இந்த லாட்ஜ்யில் வெளிமாநில மற்றும் வறுமையில் உள்ள பெண்களுக்கு ஆசைக்காட்டி அழைத்து வந்து அறையில் வைத்து விபச்சார தொழில் செய்கின்றனர் என்கிற புகார் மாவட்ட ஆட்சியருக்கு சென்றது.
அதனை தொடர்ந்து காவல்துறை ரகசியமாக கண்காணித்ததில் விபச்சாரம் செய்வது உறுதியானது. இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து சில பெண்களையும், புரோக்கர்களையும் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜனவரி 13ந்தேதி மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் வட்டாச்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் திருப்பத்தூர் நகர காவல்துறை ஆய்வாளர் பேபி அடங்கிய குழு சென்று அந்த லாட்ஜ்யில் தங்கியிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு அந்த லாட்ஜ்க்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக இந்த லாட்ஜ் உரிமையாளர் மற்றும் மேலாளரை விசாரணைக்காக தேடி வருகிறது காவல்துறை.