ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்துவது கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை புரசைவாக்கத்திலுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு ஆணையத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கின் விசாரணைக்கு இன்று ஆஜரான வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க குதிரை பேரத்தில் இறங்கியுள்ளது ஜனநாயகத்தை புதைக்கக்கூடிய செயல்.
நதிநீர் பங்கீட்டில் காவேரி ஆணையம்தான் முடிவு செய்யும், அணைகள் கட்டுவதா கூடாதா என ஆணையம்தான் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. ஆனால் அணைகள் மாநிலத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு தற்போது காவேரி தீர்ப்பாயத்தின் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் உள்ளபடி, பக்ராபியாஸ் அடிப்படையில் வாரியம் இருக்கும் என்ற அடிப்படை தன்மையே அழிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகமாகதான் நான் பார்க்கிறேன் என்று கூறினார்.