கஜா புயலால் தரங்கம்பாடி தாலுக்காவில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் அதிகமான பைபர் படகுகள் காற்றில் இழுத்து செல்லப்பட்டும், சாலைகளில் மோதியும் நிலையிலும் சேதமாகியிருக்கிறது. படகுகள், வலைகள் முற்றிலும் சேதமாகிவிட்டது என வேதனையில் அடைந்துள்ளனர் மீனவர்கள்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் இரவு வீசிய கஜா புயலால் மரங்கள் முறிந்தும், வீடுகள் சேதமடைந்தும், 100 கணக்கான பைபர் படகுகள் ஒன்றுக்கு ஒன்று மோதியும், வலைகள் மண்ணில் புதைந்தும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கஜாபுயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் புயலால் சேதம் ஏற்பட்டுள்ளது.
தரங்கம்பாடி தாலுக்காவில் மீனவர்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தியிருந்தபோதும் படகுகள் புயலால் பல மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டும், சாலைகளில் மோதியும் ஒன்றுடன் ஒன்று மோதியும் மண்ணில் புதைந்தும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக என்ஜின்கள், வலைகள் சேதமடைந்துள்ளன, ஏராளமான மீன்பிடி வலைகள் மண்ணில் புதைந்தும் அறுந்தும் சேதமடைந்துள்ளது.
மேலும் மீனவர்கள் வலைகளுக்காக போடப்பட்டிருந்த கொட்டகைகளும் காற்றில் பறந்துவிட்டது. மீன் வைக்கும் பெட்டிகள் முழுவதும் உடைந்துள்ளது. புயலின் வேகம் குறைந்தபோதிலும் மீனவர் கிராமங்களில் இயல்புநிலை துவங்கவில்லை.