Skip to main content

பாடலில் மட்டுமின்றி வசனத்திலும் இடம்பிடித்த ''புள்ளிங்கோ''   

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

அட்லி இயக்க, விஜய்யுடன் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் பிகில் . இந்த படத்தில் விஜய் வயதான ரௌடியாகவும், இளம் கால்பந்து வீரர் என்று இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையிலுள்ள சாய் ராம் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.

 

bigil trailer release

 

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தற்போது பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மொத்தம் 2.41 நிமிடம் உள்ள அந்த ட்ரைலரில் ''ஃபுட் பால் எல்லாம் தெரியாது ஆனா எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்''  என ஓல்ட் கெட்டப்பில் விஜய் பேசும் வசனங்களுடன். '' ரொம்ப ஆக்சன் ஹீரோவா மாறிட்ட மைக்கல்  காதலுக்கு மரியாதை எல்லாம் உனக்கு  மறந்தே போச்சு '' என நயன் பேசும் வசனமும் இடம்பெற்றுள்ளது. 
 

ஏற்கனவே பிகில் படத்தின் வெறித்தனம் என்ற பாடல் வெளியாகியிருந்தது. அந்த பாடலில் ''புள்ளிங்கோ இருக்காங்க வேற என்ன வேணும்'' என்ற வரிகள் இடம்பெற்றிருந்தது. ஏற்கனவே எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம் என  ''புள்ளிங்கோ'' ட்ரெண்ட் ஆகி வந்த நிலையில் பிகில் பாடலிலும் புள்ளிங்கோ என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. 

அதேபோல் தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரில் இடம்பெற்றுள்ள ஒரு வசனத்தில் ''புள்ளிங்கலா கிரவுண்ட்ல விளையாடட்டும் நாம வெளிய விளையாடலாமா செல்லம்'' என விஜய் பேசுகிறார். பாடலில் மட்டுமின்றி வசனத்திலும் இடம்பிடித்துள்ளது ''புள்ளிங்கோ''.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக்சன் த்ரில்லர் சுவாரசியம் ‘கூச முனுசாமி வீரப்பன்’ - நக்கீரன் ஆசிரியர்

Published on 23/11/2023 | Edited on 24/11/2023

 

trailer

 

ஜீ5 நிறுவனம் தொடர்ச்சியாகத் தமிழில் திரைப்படங்களைத் தயாரிப்பதும், வெளியிடுவதுமாக உள்ளது. பல வெப்சீரிஸ்களையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய கிரைம் டாக்குமெண்டரி சீரிஸ் ஒன்றை அறிவித்துள்ளது.

 

இந்த டாக்குமெண்டரி சீரிஸின் டைட்டில் மற்றும் டிரைலரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ள இந்த சீரிஸை ஷரத் ஜோதி இயக்கியுள்ளார். அவரோடு ஜெயச்சந்திர ஹாஷ்மியும் வசந்த் பாலகிருஷ்ணனும் இணைந்து கதை எழுதியுள்ளனர். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். 

 

இத்தொடரில், நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் பா.பா. மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். மேலும் வீரப்பன், “என்ன நடந்ததுனு என்னுடைய வாழ்க்கை வரலாறை அப்படியே எடுத்து சொல்றேன். தப்பு என்னுடையதா இல்ல அரசாங்கத்துதா..” எனப் பேசும் வீடியோ டிரைலரில் இடம்பெற்றுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு சீரிஸ்க்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது. 

 

trailer

 

இந்தத் தொடர் குறித்து நக்கீரன் ஆசிரியர் கூறியதாவது, “நக்கீரன் பெரும் முயற்சி எடுத்து பெரிய ஆபத்துகளை கடந்து வீரப்பனின் முதல் பேட்டி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டபோது, இந்தியா முழுவதும் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஆர்வம் இன்றும் குறையவில்லை. பல படங்களில் இதுவரை சொல்லப்பட்ட வீரப்பன் கதைகள் முழுமையானவை அல்ல. 1996-ல் நக்கீரன் எடுத்த வீடியோவை பல சர்வதேச சேனல்கள், நிறுவனங்கள் விலை கேட்டு வந்துள்ளன. யாருக்கும் தரவில்லை. இந்தக் கதையை நேர்மையாக, முழுமையாக சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் கதையும் அதில் இருக்க வேண்டும். இந்தக் கதையை திரிக்காமல் சொல்ல எனது மகள் பிரபாவதி மற்றும் அவர் உருவாக்கியுள்ள டீம் உழைத்துள்ளனர். வெறும் ஆவணப்படமாக அல்லாமல் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லருக்குரிய சுவாரசியத்தோடு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. இத்தனை வருடங்கள் காத்து வைத்த விலை மதிப்பில்லாத பத்திரிகை சாதனை, முதன் முறையாக 'கூச முனுசாமி வீரப்பன்' தொடராக ஜீ - ஃபைவ் OTT தளத்தில் வெளியாவதில் நக்கீரன் மகிழ்ச்சி கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

 

இத்தொடர் பற்றி ‘தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ்’ மேலாண்மை இயக்குநர் பிரபாவதி இரா.வி கூறியிருப்பதாவது,

 

“நம் மக்களின் ரசனை பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் அடைந்துள்ளது. சர்வதேச படைப்புகள் பலவற்றையும் கண்டு நம் மக்களின் எதிர்பார்ப்பும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் மேம்பட்டுள்ளது. இந்த சூழலில் உள்ளூர் கதைகளை உலகத் தரத்தில் படமாக்கி வெளியிடும் நோக்கத்துடன் 'தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். நக்கீரன் வெளிக்கொண்டு வந்த வீரப்பன் கதையை முதல் தயாரிப்பாக, அதுவும் உலகத் தரத்திலான ஆவணத் தொடராக உருவாக்கியிருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். ஜீ - ஃபைவ் OTT தளத்தில் எங்கள் 'கூச முனுசாமி வீரப்பன்' வெளிவந்த பிறகு, இந்தியாவில் 'docu-series' (ஆவணத் தொடர்) என்னும் வகைக்கு பார்வையாளர்கள் கோடிக்கணக்கில் பெருகப்போவது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

Next Story

'கிழித்து எறியப்பட்ட நாற்காலிகள்; சிதறி கிடந்த பள்ளி புத்தகங்கள்'- லியோ ட்ரைலர் வெளியீட்டில் நடந்த சேதம்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

'Torn down chairs; Scattered School Books'-Leo Trailer Release Damage

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

 

இந்தநிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில், ஒரு சீரியல் கில்லருக்கும் ஒரு காவல்துறை அதிகாரிக்கும் இடையே நடக்கும் மோதல் என ஒரு கதையை விவரிக்கிறார் விஜய். பின்பு அந்த சீரியல் கில்லர் கூட்டத்தின் மேல் கை வைக்கிறார் விஜய். அதன் பிறகு அந்த கூட்டத்தால் விஜய் குடும்பத்திற்கு ஏகப்பட்ட பாதிப்பு வருகிறது. அதனால் அவரை வேறொரு இடத்தில் மறைந்து வாழ அறிவுறுத்துகின்றனர். பின்பு அந்த கூட்டத்தை விஜய் ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கினாரா இல்லையா என்பதை ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாக்கியிருப்பது போல் தெரிகிறது. இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

இந்நிலையில் லியோ திரைப்படத்தின் டிரைலர் காட்சியைக் காண ரோகிணி திரையரங்கில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு விஜய் ரசிகர்கள் அதிகமாக குவிந்தனர். அப்பொழுது திரையரங்கின் நாற்காலிகளை சேதப்படுத்தி உள்ளனர். நாற்காலிகளின் பஞ்சு உறைகள் கிழிக்கப்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்ட நாற்காலிகள் சேதமடைந்ததாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலாளர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் பேரிகார்டுகள் நொறுக்கப்பட்டது. ரசிகர்களின் காலணிகள் பள்ளி புத்தகங்கள் போன்றவை திரையரங்க வளாகத்திற்கு உள்ளேயே கிடக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.