Skip to main content

மகளுடன் சாலையோரம் நடந்துசென்ற ஆசிரியர் லாரி மோதி பரிதாப பலி... ஓட்டுநர் கைது!

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாராமங்கலம் அருகே மனாத்தாள் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்தவர் கிரிஸ்டி அகஸ்டா ராணி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது மகளுடன் தாரமங்கலம் பேருந்துநிலையம் அருகில் சென்றுகொண்டிருந்தார்.

tharamangalam accident case..driver arrest


சாலையின் விளிம்பில் நடந்து சென்று கொண்டிருந்த அவர் மீது பின்புறமாக நங்கவல்லியை நோக்கி சென்ற டிப்பர் லாரியானது மோதியதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஆசிரியை அகஸ்டா ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட அவரது மகள் கதறி அழுதது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. 

 

tharamangalam accident case..driver arrest


அந்த காட்சியில் லாரி தடுமாறியோ அல்லது ஓட்டுநர் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்த முயற்சித்து கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்ததற்கான எந்த ஒரு அனுமானமும் இல்லை. வேண்டுமென்றே மோதியதுபோல சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது இந்த சம்பவம். அதோடு அவரை திட்டமிட்டு இடிப்பதற்காக சாலையைவிட்டு இறங்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு சாலைமீது ஏறி நிற்காமல் சென்றது அந்த லாரி.

 

tharamangalam accident case..driver arrest


இந்த சம்பவத்தில் தொடர்புடைய  லாரியையும், தப்பித்து ஓடிய லாரி ஓட்டுனரையும் தாரமங்கலம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் லாரி ஓட்டுநர் வேலு கிருஷ்ணனை தாரமங்கலம் போலீசார் கைது செய்து ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்