Published on 25/01/2022 | Edited on 25/01/2022
தமிழகம் முழுவதும் சேதமடைந்த 20,453 குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால், மாநிலம் முழுவதும் உள்ள குடியிருப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 22,771 குடியிருப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக இடித்து மறு கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர் குழு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.