தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெறவுள்ளது. எனவே தமிழக வாக்காளர்கள் வாக்காளர் அட்டையில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பினால் இணைய தள முகவரி: https://www.nvsp.in/ சென்று விண்ணப்பிக்கலாம்.
![tamilnadu voter list add name and data correction start sep1 to sep 30 apply online](http://image.nakkheeran.in/cdn/farfuture/alhANgizxhehhdxOy4YIbZC9XDzIYMn_81r2O0rqM5g/1566983749/sites/default/files/inline-images/ElectionCommission.jpg)
மேலும் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை இணையதளம் மூலம் சரிபார்த்து கொள்ளலாம். அதேபோல் புதிய வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டுமென்றால், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட 14 ஆவணங்களை கொண்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கூறினார். வாக்காளர்கள் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், சரிபார்க்கவும் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். 2020- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக வாக்காளர்களின் முழு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினார்.