![tn republic day tableau](http://image.nakkheeran.in/cdn/farfuture/kZFqY_vo9yC4UpYy7khKxMmlGoZ_3uLHcjsCsUtShWE/1645334041/sites/default/files/inline-images/vrefeew.jpg)
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக அரசின் சார்பில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்களித்த வீரர்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.
இதையடுத்து, அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ஜன. 26- ஆம் தேதி சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் மூன்று அலங்கார ஊர்திகளும் கலந்து கொண்டன. அதன்பின்னர் மாவடங்கள்தோரும் சென்ற அலங்கார ஊர்திகளுக்கு மக்கள் பூக்களைத் தூவி வரவேற்பு அளித்து மரியாதை செய்தனர்.
இந்தநிலையில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் 23 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்கள், இந்த அலங்கார ஊர்திகளைக் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.