Published on 15/02/2020 | Edited on 16/02/2020
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தற்பொழுது வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நடைபெறும் போராட்டத்தில் இரவிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அதேபோல் மதுரையிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற தடியடி சம்பவத்தை கண்டித்து மதுரை ஜின்னா பகுதியில் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.