இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். தண்ணீர் இல்லாத காரணத்தால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஒரு சில பள்ளிகளில் கழிப்பறையை பயன்படுத்த கூட தண்ணீர் இல்லாததால் விடுமுறை அளிக்கப்பட்டது. இதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திமுக நகர் மாணவரணி செயலாளர் ஹமீது சுல்தான் தலைமையில் பொதுமக்களை திரட்டி கீழக்கரையில் உள்ள துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு மின்சாரம் இல்லை மின்சாரம் இல்லை கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை,தூக்கமில்லை தூக்கமில்லை கடந்த மூன்று நாட்களாக தூக்கமில்லை என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இது பற்றி மின்சார வாரிய அதிகாரியிடம் கேட்ட போது இன்று மின்சாரம் வந்து விடும் இந்த பிரச்சனையை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஒற்றை வரியில் பதில் அளித்தனர். தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறி வருகிறது எனகூறும் அரசு, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறது. இதற்கு அரசு என்ன சொல்ல போகிறது என்று அந்த பகுதி பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.