Skip to main content

சசிகலா புஷ்பா - ராமசாமி திருமணத்திற்கு தடை: நீதிமன்றம் உத்தரவு!

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
sasi puspa


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., சசிகலா புஷ்பா, ராமசாமியை திருமணம் செய்ய மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. டெல்லியில் வசித்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு முன் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது டிடிவி தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தனிமையில் டெல்லியில் வசித்து வந்தார். அதன்பின் அண்மையில், இருவரும் முறையாக விவகாரத்து பெற்றனர். இந்நிலையில் சசிகலா புஷ்பாவுக்கும், ஓரியண்டல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டர் ராமசாமிக்கும் வரும் 26ம் தேதி டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், சத்யபிரயா என்பவர் தனது குழந்தையுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் டெல்லி ராமசாமி தனது கணவர் என்றும் தனக்கும் அவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது எனவும் கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அதில் ராமசாமி வேறு பெண்ணை திருமணம் செய்ய மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் எம்.பி., சசிகலா புஷ்பா, ராமசாமியை திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்; சசிகலா புஷ்பா தரப்பு மீது போலீசார் சந்தேகம்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

bjp sasikala pushpa husband ramsamy house incident 

 

சிவகங்கை மாவட்டம் வடக்கு விசவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 52). ஆர்எஸ்எஸ் மத்திய குழு உறுப்பினராக உள்ள இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு நேற்று முன்தினம் வடக்கு விசவனூர் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். நேற்று காலை வழக்கம் போல் எழுந்து வீட்டின் வெளியில் வந்து பார்த்தபோது வெளி கேட் பகுதியில் மூன்று நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமசாமி இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

 

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையின் போது, வீட்டில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது வீட்டின் மற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமிராக்கள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சம்பவம் நடைபெற்ற வெளி கேட்டின் முன்பு இருந்த சிசிடிவி கேமரா மட்டும் இயங்காமல் இருப்பது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டு வெடிகுண்டுகளை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பாஜக பிரமுகரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பாவின் கணவர் தான் ராமசாமி. இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே போலீசார், சசிகலா புஷ்பா தரப்பு மீது இதற்கும் தொடர்பு இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் சதிச் செயல் காரணமா? எனப் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல்

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

Attack on former MP Sasikala Pushpa's house

தூத்துக்குடியில் முன்னாள் பாஜக எம்.பி வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

பாஜகவின் முன்னாள் எம்பியும் தமிழக பாஜகவின் துணைத் தலைவருமான சசிகலா புஷ்பாவிற்கு தூத்துக்குடியில் சொந்தமாக வீடு உள்ளது. இன்று சசிகலா புஷ்பா கன்னியாகுமரியில் கட்சியின் சார்பில் நடத்தப்படும் விழாவிற்குச் சென்றுவிட்டதால் மர்ம நபர்கள் அவரது வீட்டில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

 

இந்த தாக்குதலில் அவரது கார், செடிகள் வைத்திருந்த தொட்டிகள், ஜன்னல் கண்ணாடிகள் நாற்காலிகள் என வீடு முழுவதும் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.