![tamilnadu photojournalist photographers exhibition last day function](http://image.nakkheeran.in/cdn/farfuture/rCS_Y2wJygCQM7fGCf-GgyBxGiIy4NqrFI7OTo6T1Gg/1676633856/sites/default/files/2023-02/pj-1.jpg)
![tamilnadu photojournalist photographers exhibition last day function](http://image.nakkheeran.in/cdn/farfuture/5CVhWxgkbTHm3hrl_R0fUJUufuSPWXv8VJ8wTBTA8po/1676633856/sites/default/files/2023-02/pj-2.jpg)
![tamilnadu photojournalist photographers exhibition last day function](http://image.nakkheeran.in/cdn/farfuture/-jblS6zq8KAiBoNaoyOvepp8vha2EVkvqHm26U82Zf4/1676633856/sites/default/files/2023-02/pj-3.jpg)
![tamilnadu photojournalist photographers exhibition last day function](http://image.nakkheeran.in/cdn/farfuture/6MScPGlNtRZaAweeu_Vr_K2anOjNo8iwD6Lx0wbhxbE/1676633856/sites/default/files/2023-02/pj-4.jpg)
![tamilnadu photojournalist photographers exhibition last day function](http://image.nakkheeran.in/cdn/farfuture/zwScst7WEqgS1YVoRXPZLKyo3sW0wRlVVsNiDRdqSRE/1676633856/sites/default/files/2023-02/pj-5.jpg)
![tamilnadu photojournalist photographers exhibition last day function](http://image.nakkheeran.in/cdn/farfuture/8xb3C4EkWkPWJQfdjK1hbvSb3jOacs1cJaLTDszJBFY/1676633856/sites/default/files/2023-02/pj-6.jpg)
![tamilnadu photojournalist photographers exhibition last day function](http://image.nakkheeran.in/cdn/farfuture/f752Fuc7OLLjqRwWLpXgWBtIaGXBWOed4Cxj1a4Xfn0/1676633856/sites/default/files/2023-02/pj-7.jpg)
![tamilnadu photojournalist photographers exhibition last day function](http://image.nakkheeran.in/cdn/farfuture/1LPhv0yavNymqaywOzwOicwAAfhjRns9co_4z3VbCgY/1676633856/sites/default/files/2023-02/pj-8.jpg)
![tamilnadu photojournalist photographers exhibition last day function](http://image.nakkheeran.in/cdn/farfuture/mhm0gM-6NNv2lJrFZrK8aXcp8QFRFUv0Q2QNQc3Z6ag/1676633856/sites/default/files/2023-02/pj-9.jpg)
![tamilnadu photojournalist photographers exhibition last day function](http://image.nakkheeran.in/cdn/farfuture/1dIKKCXh90iVXYTnpfgb49vDcYNvnw-LhBZRpd30cuU/1676633856/sites/default/files/2023-02/pj-10.jpg)
![tamilnadu photojournalist photographers exhibition last day function](http://image.nakkheeran.in/cdn/farfuture/aItLqR8Hmx3gXrPQ3EhY6sd42gbLthSm0KiPx449y3M/1676633856/sites/default/files/2023-02/pj-11.jpg)
தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கண்காட்சி தொடங்கியதில் இருந்து இன்றுவரை ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இக்கண்காட்சிக்கு வருகை தந்து புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்து ரசித்தனர். மேலும், இதழியல் மற்றும் காட்சித்தொடர்பியல் துறையில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு கண்காட்சியில் பத்திரிகை துறை தொடர்பான வகுப்புகளும் நடப்பட்டன. கண்காட்சியின் நிறைவு விழா இன்று (17.02.2023) நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களான அருண் ராம், ரஞ்சிதா குணசேகரன், கார்த்திகைசெல்வன் மற்றும் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.