சிதம்பரத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி திமுக சார்பில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் கலந்துகொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மக்களிடத்திலும் நேரடியாகச் சென்று கைகொடுத்து வாழ்த்து கூறி குழந்தைகளை செல்ஃபி எடுத்துக் கொண்டு மனுக்களை பெற்று மேடைக்கு திரும்பினார். பின்னர் பதிவு செய்யப்பட்டிருந்த கோரிக்கை மனுக்களை பெட்டியிலிருந்து எடுத்து ஒவ்வொருவரின் குறைகளை பேச வைத்தார்.
இதில் உள்ளாட்சித் துறை தொழில்துறை, விவசாயத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட வகைகளில் நடைபெறும் பல்வேறு ஊழல் மற்றும் குளறுபடிகளை மனுதாரர்கள் கூறினார்கள். இதற்கு பதில் அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் 100 நாட்களுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யப்படும் என உறுதி கூறினார்.
இதனைத்தொடர்ந்து கராத்தே, பேட்மிட்டன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாவட்டத்தில் சாதனை புரிந்த மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் கடலூர் மாவட்டத்திலுள்ள கடலூர் சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஐந்து சட்டமன்ற தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை மனுவாக பெற வந்துள்ளேன். இது மாநாடு போல் பிரம்மாண்டமாக எழுச்சியாக உள்ளது. கடலூர் மாவட்டத்தை திமுக கழக மாவட்டமாக மாற்றியுள்ளார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அவருக்கு வாழ்த்துக்கள். மேலும் பேசுகையில் காலம் கனிந்து வருகிறது. கூட்டணி கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் திமுக அவர்களுக்கு தலையாட்டாமல் தமிழகத்துக்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் கேட்டுப் பெற்றது. அ.தி.மு.க., ஆடசியில் பேக்கேஹ் டெண்டர் நடக்கிறது. உள்ளாட்சி துறை இல்லை. ஊழல் ஆட்சி துறை. அந்த துறைக்கு அமைச்சராக இருந்ததிற்கு நான் வெட்க்கடுகேிறேன். அமைச்சர் வேலுமணி பெயரிலேயே மணி இருக்கு.
அவருக்கு மணிதான் குறிக்கோள். நம்பர் 1 கமிஷன் அமைச்சர் அவர்தான். அவர் சிறைக்கு செல்வது நிட்சயம். தெரு லைட்,துடைப்பம், பிலீச்சிங் பவுடரில் கூட ஊழல். கடலுார் மாவட்ட மழை வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக வல்லுநர்களிடம் பேசி வருகிறேன். பச்சை துண்டு போட்டுக்கொண்டு நானும் விவசாயி என எடப்பாடி விவசாயிகளுக்க துரோகம் செய்கிறார். சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி கிடைக்க செய்வேன். பெண்களுக்கான அனைத்து திட்டமும் தி.மு.க. ஆடசியில் கொண்டு வரப்பட்டது. எடப்பாடி பழனிச்சாயின் அரசு பேரழிவின் உச்சத்தில் உள்ளது. எதற்கும் தகுதியில்லாத உதவாக்கறை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகியுள்ளார்.
மக்களுக்காக இரு, மக்களுடன் இரு என்ற அண்ணாவின் வார்த்தைக்கு ஏற்ப பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். ஊழல் நிர்வாக திறமையின்மை மற்றும் அகங்காரம் ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் எடப்பாடி ஆட்சி. தி.மு.க., மத்திய அரசில் அங்கம் வகித்த போது பெற்ற திட்டங்களை பெரிய பட்டியலே போடலாம். குறிப்பாக மத்திய அரசின் மொத்த திட்டத்தில் 11 சதவிகிதம் தமிழகத்திற்கு பெற்றுள்ளோம். குறிப்பாக தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, 1553 கோடியில் உருக்கலையை மேம்படுத்தியது, 1650 கோடியில் மதுவரவயல் பறக்கும் சாலை திட்டம் , மெட்ரோ ரயில் திட்டம், கடல் நீர் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பட்டியல் போடமுடியாத திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஆனால் மத்திய அரசில் இப்போதும் அங்கம் வகிக்கும் எதை கேட்டு பெற்றுள்ளார். எய்ம்ஸ் கொண்டு வந்ததா சொல்ற இவர்கள் இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்த வைக்கவில்லை. நமக்கு தரவேண்டிய நிதியை கூட கேட்டு பெற முடியாத அரசாக உள்ளது. இந்தி திணிப்பு, நீட் தேர்வுக்கு விலக்கு, தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்களுக்க வேலை உள்ளிட்டவைகளை அரசு தடுக்கவில்லை. உதவாக்கரை பழனிச்சாமி தி.மு.கவை குறை சொல்ல அறுகதை இல்லாதவர். அவர் பேச்சை கேட்கவே சகிக்கல. தமிழ்நாட்ட மக்கள் எடப்பாடியை மதிக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்.
இந்த நிகழ்வு உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதை குறிப்பாக ஆளும் கட்சியினர் அதிகம் பார்த்து வருகின்றனர். இங்கு கொடுக்கப்படும் கோரிக்கைகளை இரவோடு இரவாக அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதற்காகவாவது இந்த கூட்டம் பயன்படட்டும். இந்த எழுச்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட போகிறது, 5 முறை முதல்வராக இருந்த கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்காத எடப்பாடி அரசுக்கு தழிகத்தில் இடம் கொடுக்கலாமா? எனவே . நுாறு நாளில் ஆட்சி மாற்றும் ஏற்படும் என்றார். இதில் தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் புகழேந்தி, ஐயப்பன், மருதுார் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.