Published on 09/11/2020 | Edited on 09/11/2020
![tamilnadu govt schools students neet exam free coaching start now](http://image.nakkheeran.in/cdn/farfuture/EwKiGO2z-eyIzsZUBJLkWlLY6qCkJFG9Kuho-vonP6o/1604903927/sites/default/files/inline-images/neet%20exam%20%283%29.jpg)
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கியது.
அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நீட் பயிற்சி வகுப்பில் சேர இதுவரை பதிவு செய்யாத மாணவர்கள் https://neet.e-box.co.in என்ற இணையதளத்தில் தங்களது 11- ஆம் வகுப்பு பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு 'Log in' செய்து பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். நீட் தேர்வு தேதிக்கு முந்தைய வாரம் வரை பயிற்சி வழங்கப்படும்; ஆன்லைனிலேயே ஒவ்வொரு வார இறுதியில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
![tamilnadu govt schools students neet exam free coaching start now](http://image.nakkheeran.in/cdn/farfuture/C4f2LEqei_5WPgFC5JbYjdN7YiSFVdLv_NkEK0sudok/1604903990/sites/default/files/inline-images/e-box.jpg)
நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை இ-பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.