அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து எங்கள் போராட்டம் தொடரும் என அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மருத்துவர்களின் போராட்டத்தை மக்களுக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டாம் என அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாளைக்கு பணி திரும்ப பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்திருந்தார். ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மருத்துவர்கள் ஆறாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் என எச்சரித்துள்ளார். மேலும் பணிக்கு வராத மருத்துவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவைகளை காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.