Published on 26/08/2020 | Edited on 26/08/2020
![TAMILNADU BE AND GOVT ARTS AND SCIENCE COLLEGE STUDENTS](http://image.nakkheeran.in/cdn/farfuture/-n1vGXqy2V-EHFe0NQ4eU2GE0f4OD6zqzNJfWxiHxtw/1598407231/sites/default/files/inline-images/Campus%20View%20Of%20Anna%20University%20Chennai_Campus-View%20%281%29.jpg)
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று (26/08/2020) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்த 1.60 லட்சம் பேருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்படும். ஒரே கட்- ஆப் மதிப்பெண் கொண்ட பலரை வரிசைப்படுத்த ரேண்டம் எண் பயன்படும் என மாணவர் சேர்க்கை செயலர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று (26/08/2020) தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கு தேர்வாகியுள்ளவர்கள் கல்லூரி இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி உறுதி செய்யலாம். வெளிமாவட்டத்தில் உள்ளவர்கள் www.tngasa.in இல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.